மாவட்ட அளவிளான கல்லூரி போட்டிகளில் சாதனை படைத்த கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவி..

கடந்த வாரம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி சார்பாக “PIXEL 18” என்ற மாவட்ட அளவிளான போட்டிகள் நடைபெற்றன. இதில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இருந்து 26 கல்லூரிகள் கலந்து கொண்டு 30 குழுக்களாக போட்டியிட்டன.

இப்போட்டியில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக கலந்து கொண்ட N.ஷாகுல் ஹமீது மகள் ஆயிஷத் நுஹைலா, இரண்டாம் ஆண்டு BSC.IT துறை மாணவி “PAPER PRESENTATION” மற்றும் “AD ACT” போட்டிகளில் முதல் பரிசுகளை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி முதல்வர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாராட்டினர்.