திறமை இருந்தும், படிக்க வழியில்லை- மனம் இருந்தும் பணம் இல்லை, இதோ நீங்களும் IAS, IPS, IFS என ஜொலிக்க ஒரு வாய்ப்பு…

இந்தியாவின் சுதந்திரத்திற்காக சொத்துக்களை வாரி வழங்கிய சமுதாயம், கல்வியில் கவனம் செலுத்தவில்லை என்பதே யதார்த்த நிலை. அன்று சொத்துக்களை இழந்தவர்கள் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இரண்டாம் நிலை பிரஜையாக வாழும் சூழலுக்கு இஸ்லாமிய சமுதாயம்  தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மொத்தம் 18% உள்ளனர், ஆனால் IAS போன்ற அரசாங்க சேவையில் இருப்பவர்களோ அதிகபட்சம் 4 சதவீதத்தினர் தான்.

இதற்கு முக்கிய காரணம் சரியான வழிகாட்டுதல் இல்லாமையும், தேவையான அளவுக்கு பொருளாதார உதவியும் இல்லாததும் தான். இப்பிரச்சினைகளை களைந்து தகுதியானவர்களை கண்டறிந்து இலவச தங்கும் இட வசதியுடன் இஸ்லாமிய சமுதாயத்தினரை IAS, IPS, IFS போன்ற வேலை வாய்ப்புக்களுக்கு தயார்படுத்தும் அமைப்பு தான் AMP – Association of Muslim Professional (www.ampindia.org). இந்நிறுவனம் மும்பையை தலைமை அலுவலகமாக கொண்டு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு கல்வி அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்து நிலையிலும் சமுதாய மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

இவ்வமைப்பு ஆமீர் எட்ரசியை (Aamir Edresy) தலைவராக கொண்டு இந்தியாவில் பல இடங்களில் இயங்கி வருகிறது. தற்சமயம் தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன் பட வேண்டும் என்ற நோக்கில் இராமநாதபுர மாவட்ட மக்களும் பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரி முதல்வர் சுமையா முயற்சியில் சமூக மற்றும் சமுதாய ஆர்வலர்களை உள்ளடக்கி  இராமநாதபுரத்திற்கான  Association of Muslim Professional அமைப்பின் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வமைப்பு பற்றிய கூடுதல் விளக்கம் கீழே இணைக்கப்பட்டுள்ளது அல்லது www.ampindia.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.  கீழே க்ளிக் செய்து விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

AMP – Introduction Booklet 1_7 24th May’17-1

முக்கிய குறிப்பு:- இவ்வமைப்பு சம்பந்தமான கூடுதல் விபரங்கள் மற்றும் நிகழ்வுகள் www.keelainews.com இணையதளத்தில் தொடர்ந்து வரும்.. இன்ஷாஅல்லாஹ்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..