கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கனரக வாகன உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான அசோக் லேய்லேண்ட் லிமிடெட் ஓசூர் கம்பெனி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் இயந்தரவியல் மற்றும் மின்னனியல் துறையை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாம் துவக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.அலாவூதின் தலைமையுரையாற்றினார், துணை முதல்வர்கள், ராஜேந்திரன் மற்றும் சேக்தாவூத் ஆ‌கியோ‌ர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக மின்னணுவியல் துறை விரிவுரையாளர் மரியதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அசோக் லேய்லேன்ட் லிமிடெட் ஓசூர் நிறுவனத்தின் பொது மேலாளர் சதிஸ்குமார் ஆ‌கியோ‌ர் தங்களது நிறுவனத்தை பற்றியும் உற்பத்தி செய்யும் பொருட்கள், செயல்பாடுகள், நிர்வாகம், சலுகைகள், ஊதியம், போன்றவை குறித்தும் தேர்வில் கலந்து கெண்ட மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் நேர்முகத் தேர்வினை நடத்தினார். இதில் 98 மாணவர்கள் கலந்து கொண்டு 58 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியமாக 9235 ரூபாய் வழங்கப்படும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
 
வளாக தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் துணை முதல்வர் சேக்தாவூத் மற்றும் இயந்தரவியல் துறை தலைவர் கணேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் ஆ‌கியோ‌ர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..