கீழக்கரை ஏர்வாடியில் தீவிரவாத எதிர்ப்பு தின பொதுக்கூட்டம்..

கீழக்கரை ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜனவரி 30 மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற தினத்தை நினைவு கூறும் விதமாக “தீவிரவாத எதிர்ப்பு தின” பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் இன்று (30-01-2018) மாலை 6.30 மணியளவில் மீன் கடை மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையிரையை PFI தலைமை மாவட்ட செயலாளர் நியாஸ்கான் வழங்கினார். வரவேற்புரையை நூருல் அமீன் வழங்கினார். சிறப்புரையை ஹாலித் முஹம்மது சாஹிப், மாநில பொதுசெயலாளர்( PFI), ஜஹாங்கீர் அருஷி மாநில பேச்சாளர். (SDPI கட்சி) மற்றும் அபூபக்கர் சித்திக் ஆகியோர் வழங்கினர். இப்பொதுக்கூட்டத்தில் பல முஹல்லாக்களை சார்ந்த இமாம்களும், ஆலிம்களும் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலக்கியச்சோலை பதிப்பகம் சார்பாக “ரணங்கள்”, “நபி(ஸல்) வரலாறு”, “ஹமாஸ் இயக்க அரசியல் பார்வை” என்ற மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் நன்றியுரையை ஒருங்கிணைப்பாளர் ஹாஜா முகைதீன் வழங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.