விபத்தை தடை செய்ய வேகத்தடை அவசியம் – மக்கள் டீம் கோரிக்கை ..

கீழக்கரையின் நகரம் அதிகப்பட்சமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குறைவாக இருந்தாலும், பல வகையான அழகூட்டும் பேவர் ப்ளாக் சாலை, தார் சாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அழகை அழிக்கும் வண்ணம் அழிக்க முடியாத அளவுக்கு குப்பை மேடுகளும் நிறைந்த வண்ணம்தான் உள்ளது என்பது கவனிக்கல வேண்டிய விசயம்.
இத்தனை அழகான சாலைகள் இருந்தாலும், அச்சாலைகளில் கனரக வாகனங்களை விட அதிகமாக ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களே அதிகம் செல்கின்றன. இவ்வாகனங்கள் அதிகம் அதிகம் செல்கின்றன என்பதை விட அதிவேகமாக செல்கின்றார்கள் என்பதுதான் மிகவும் ஆபத்தான, வேதனைக்குரிய விசயம். தெருக்களிலும், சாலைகளிலும் வாகனத்தை ஓட்டுபவர்கள் எதிரில் வருபவர்களை கூட பொருட்படுத்தாமல் விபத்துக்குள்ளாவது அன்றாட நிகழ்வாகிவிட்டது, அத்துடன் சச்சரவுகளும் அதிகமாகின்றது.
இதற்கு தீர்வு காண கோரி நகராட்சியிடம் மக்கள் டீம் சார்பாக பலமுறை மனுக்கள் கொடுத்தும், அதற்கான எந்த வித நடவடிக்கையும் இல்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டார் மக்கள் டீம் காதர். ஆனால் இந்த விசயத்தில் சிறிது ஆறுதல் தரும் விதமாக கிழக்கு தெரு ஜமாத் சார்பாக இரு இடங்களிலும், மேலத்தெரு ஜமாத் சார்பாக 8 இடங்களிலும் அவர்கள் சொந்த செலவில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதுபோல் அனைவரும் செய்வார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, சாத்தியமும் இல்லை. ஆனால் நகராட்சியினர் வேகத்தடை அமைப்பதில் எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் தட்டிக்கழிப்பது மிகப் பெரிய விபத்துக்களுக்கு வழிவகுக்க கூடும். ஆகையால் மீண்டும் நினைவூட்டும் விதமாக நகராட்சிக்கு மனு அளிக்கப்பட உள்ளது என மக்கள் டீம் காதர் கூறி முடித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

2 Comments

  1. குலுங்காம சீரா போவதற்குத்தான் அரசாங்கம் கோடிகளை கொட்டி சாலை அமைக்குது, அதிலே நினைத்தார்களெல்லாம் தெருக்கு தெரு, மூலைக்கு மூலை வேகத்தடை வச்சா அப்புறம் எதுக்குங்க இந்த ஊருக்கு ரோடு தேவை பேசாம ரப்பிஷ் கொட்டி அதிலே போகசொல்லுங்க நல்லா குலுங்கும். இதுலே நகராட்சிய குத்தம் சொல்றீங்க நாலுபேர வச்சிக்கிட்டு லட்டர்பேடு ரெடி பன்னி என்ன வேணும்னாலும் செய்வீங்களா?

  2. இந்த வேகத்தடை அமைக்க முறையாக நகராட்சிலே அனுமதி வாங்குநீங்களா மொதல்ல

Comments are closed.