69 வது குடியரசு தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு ஆட்சியர் நன்றிசான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும், மூளை நரம்பியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும் டாக்டர். மலையரசு,MD (குழந்தைகள் நலம்) D.M. (மூளை நரம்பியல்)  மாவட்ட ஆட்சித் தலைவரின் நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌவரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு இராமநாதபுரம் காவற்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும் இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். ஞானக்குமார்M.S தூய்மையான முறையில் பராமரித்ததற்காகவும், அதிக அளவு அறுவைசிகிச்சை மேற்கொண்ட தற்காகவும் ஆணறுவை சிகிச்சையில் சிறப்பாக பணிபுரிந்த தற்காக மாவட்ட ஆட்சித்தலைவரின் நற்சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டது.


அதே போல்  சித்த மருத்துவ துறையில் சிற்பாக பணியாற்றியமைக்காக டாக்டர்.புகழேந்தி மற்றும் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் ஜவஹர்லால் .டாக்டர்.கருப்புசாமி
டாக்டர். கருணாகரன் ஆகியோர்களுக்கும், செவிலியர்களுக்கும் நற்சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.