69 வது குடியரசு தினத்தையொட்டி இராமநாதபுரம் சுகாதார துறை அலுவலர்களுக்கு விருது..

இராமநாதபுரம் மாவட்டத்தில்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நற்சான்றிதழ் விருதுகள் இன்று இராமநாதபுரம் காவற்படை மைதானத்தில் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தை நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி பணிகளில் தமிழகத்தில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதற்காக மாவட்ட துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர். பா.குமரகுருபரன், காவனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்ந்த பகுதிகளில் டெங்கு நோய் பெருமளவு தாக்காமல் களப்பணியிலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையிலும் பணியாற்றிய டாக்டர்.கலைராஜன்,  கடந்த காலங்களில் துறையில் அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தி அதிகமாக டெங்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்திய உச்சிப்புளி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், புதுவலசை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக அளவு சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொதிப்பு நோய் சிகிச்சையில் மருத்துவ அலுவலருக்கு உறு துணையாக இருந்த செவிலியர் பிரவீணா,பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறிதளவு சம்பளத்திலும் சுத்தமாக பராமரித்தமைக்காக அமுதா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தனது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வரும் காலங்களில் இது போன்ற விருதுகள் வாங்க வேண்டும் எனவும் அதற்கு தான் உறுதியாக இருப்பேன் எனவும் துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்தார்