தமுமுக சார்பாக இரத்த தான முகாம்…

இன்று (26.01.2018) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளம் அரசு மருத்துவமனையில் 69 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்சியில் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அன்வர் அலி, மமக செயலாளர் ஜஹாங்கிர், பொருளாளர் பரக்கத்துல்லா, துணை தலைவர் ரைஸ்இப்ராஹிம், தமுமுக துணை செயலாளர் சிராஜிதீன், மாவட்ட PRO ஷேக்பரிது, இராமநாதபுரம் நகர் தலைவர் பரக்கத்துல்லா, கீழக்கரை நகர் செயலாளர் அபுரோஸ் கான் மற்றும் பனைக்குளம், புதுமடம், ஆற்றாங்கறை, புதுவலசை, சித்தார்கோட்டை, பிச்சாவலை, கீழப்புதுகுடி, மேலப்புதுகுடி, சக்கரக்கோட்டை கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொன்டனர்.