திருவாடானையில் தேசிய கொடி ஏற்ற மறந்த அலுவலகங்கள்…

திருவாடானையில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றவில்லை. இந்தியா முழுவதும் 69வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் வேலையில் திருவாடானை அரசு அலுவலகங்களான சார் நிலை கருவூலம், பாரதிநகரில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம், வேளாண்மை அலுவலகம் திருவாடானை, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, எல்.ஐ.சி அலுவலகம், புள்ளியல் துறை, திருவாடானை மின்சாரவாரிய அலுவலகம், ஆகிய அவலகங்களில் தேசிய கொடி ஏற்றவில்லை.

இந்த அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றுவதற்கு கம்பங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவலகங்கள் கடந்த வருடமும் கொடி ஏற்றவில்லை. இது குறித்து பொது மக்கள் சிலர் தேசிய கொடி ஏற்ற மறந்த அலுவலகங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.