இஸ்லாமியா பள்ளியில் மாவட்ட அளவிளான கிராத் போட்டி சிறப்பாக நடைபெற்றது..வீடியோ பதிவுடன்..

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் சார்பாக 25-01-2018 அன்று பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிராத் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 23 பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள், இது போன்ற போட்டிகள் பள்ளிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்கள்.

புகைப்படத் தொகுப்பு