குடியரசு தினத்தை முன்னிட்டு அல் பய்யினா கல்விக் குழுமம் சார்பாக கீழக்கரையில் போக்குவரத்து ‘குவி லென்ஸ்’ கண்ணாடி நிறுவப்பட்டது – விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய முயற்சி

கீழக்கரை நகரில் தொடர்ச்சியாக வாகன விபத்துக்கள் நிகழ்ந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. நகருக்குள் வாகனங்களின் கட்டற்ற பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. மிக குறுகலான பாதை அமைப்புகளில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் சிக்கி கொள்ளும் வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்து போக முழு முதற் காரணமாக இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, இந்திய குடியரசு தின நாளான இன்று, கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளி கல்விக் குழுமம் சார்பாக கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகே அலுவலகம் அருகாமையில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய முயற்சியாக போக்குவரத்து ‘குவி லென்ஸ்’ கண்ணாடி நிறுவும் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை கீழக்கரை காவல்துறை சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன், போக்குவரத்து காவலர் போல் உடையணிந்த அல் பய்யினா மெட்ரிக் பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜஸீம் உடன் இணைந்து, போக்குவரத்து ‘குவி லென்ஸ்’ கண்ணாடி கம்பத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது பள்ளியின் தாளாளர் ஜாபீர் சுலைமான், பள்ளியின் நிருவாக அதிகாரி பைசல், பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன், பள்ளியின் பசுமை பாதுகாப்பு படை தலைவர் ஹாஜா அனீஸ், இந்தியன் சோசியல் போரம் அமைப்பின் தம்மாம் உதவி தலைவர், கீழக்கரை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர். ஜஹாங்கீர் அரூஸி ஆலீம், இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி. சல்மான்கான், விளையாட்டு துறை பயிற்சியாளர் நதீர், தலைமை எழுத்தர் ரஹீம், அல் பய்யினா அகடெமியின் நிருவாக அதிகாரி தவ்ஹீத் ஜமாலி ஆலீம் ஆகியோர் உடனிருந்தனர். கீழக்கரை நகரில் இது போன்று போக்குவரத்து குவி லென்ஸ் கண்ணாடி நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

3 Comments

Comments are closed.