கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நடத்திய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – புகைப்படத் தொகுப்புடன்..

கீழக்கரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடரும் வாகன விபத்துக்களை தடுக்கும் விதமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (25.01.2017) மாலை 5 மணியளவில் ஹூசைனியா மஹாலில் கீழக்கரை கோட்டம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார். முகம்மது சதக் பாலிடெக்னிக் பேராசிரியர். முனைவர் அலாவுதீன், கீழக்கரை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் செய்யது ஜகுபர் சாகுனி, கீழக்கரை கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜிஹர், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அகமது, வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் ரெத்தின முஹம்மது, கீழக்கரை ரெட்கிராஸ் சங்கத்தின் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தர்,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி செல்வ விநாயகம், கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி, கீழக்கரை நகரில் போக்குவரத்தை சீர் செய்வது சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது சாலை விபத்துக்களை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் மற்றும் வடக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் இணைத்து பத்து ஹெல்மெட்டுகளை கீழக்கரை இளைஞர்களுக்கு வழங்கினர். கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பத்து பேருக்கு ஒளிரும் சட்டைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன் நன்றியுரை பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை காவல் துறை மற்றும் கீழக்கரை பொதுநல அமைப்புகள் சிறப்பாக செய்திருந்தனர்.

புகைப்படத்தொகுப்பு