கீழை டைரி -2. அல் பய்யினாஹ் கல்வி குழுமம்..

கீழை டைரி -2. 

அல் பய்யினாஹ் கல்வி குழுமம்

கீழக்கரையில் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் அல் பய்யினாஹ் பள்ளியும் ஒன்றாகும்.  அப்பள்ளியின் தாளாளர் பள்ளியின் செயல்பாடுகளைப் பற்றி கூறியதாவது:-

கீர்த்திமிகு கீழக்கரையில் எத்தனையோ பள்ளிக்கூடங்கள் இருந்தாலும் முதன் முதலாக முத்தாய்ப்பாக மார்க்க கல்வி இணைந்த உலகக்கல்வியை கற்று கொடுக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் அல் பய்யினாஹ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் என்பதை நம்மில் அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தக் கல்விக்கூடம் கடந்த 2012 ஆண்டு சேர்மனாக ரஃபி அஹமது , துணை சேர்மனாக முஹம்மது இக்பால், செயலாளர்  இம்ரான், மற்றும் தாளாளர் ஆக ஜாபிர் சுலைமான் ஆகியோரை உள்ளடக்கி துவங்கப்பட்டு இன்று அனைத்து துறையிலும் மாணவர்கள் சிறந்து விளங்கும் விதமாக ஒரு சுடர் விடும், மாற்றத்தின் வித்தகர்களாய் இளைய சமுதாயத்தை இக்கல்வி நிறுவனம் உருவாக்கி வருகிறது.

அல் பய்யினாஹ் பள்ளிக்கூடம் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல் வேறு பயிற்சிகளையும், நிகழ்ச்சிகளையும் புதுமையான வகையில் நடத்தி வருவது ஓரு முக்கிய அம்சமாகும். மேலும் உலக கல்வி, மார்க்க கல்வி, கூடுதல் கல்வி நடவடிக்கைகள், இணை பாட நெறி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் எதுவாக இருந்தாலும் எங்கள் மாணவ, மாணவிகள் அதிலே வெற்றிகளை குவிப்பார்கள் என்பது கடந்த கால நிகழ்வின் நிதர்சன உண்மை.

கீழக்கரை தனியார் பள்ளிக்கூடங்களில் முதன் பள்ளியாக மத்திய அரசால் சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பெருமையும் நம் பள்ளிக்கே சாரும். எதர்வரும் காலங்களில் இன்னும் பல சாதனைகளை படைத்து சமூகத்தில் சிறந்த தலைவர்களை உருவாக்கவும் நம் பள்ளி எல்லா நிலையிலும் மாணவர்களை தயார் படுத்தப்படுகிறார்கள்.

மேலும் கீழக்கரையில் முதன் முதலாக பெண்களுக்கு B.A . Islamic Studies பல்கலைக்கழக இளங்கலைப்பட்டத்தை அறிமுகபடுத்திய கல்வி நிறுவனமாக அல் பய்யினாஹ் அகாடமி கடந்த 2016ல் உருவாக்கப்பட்டு சிறந்து விளங்கி வருகின்றது.

எங்கள் அகாடமி ஒரே சமயத்தில் 2 இளங்கலை பட்டபடிப்பு (DUAL DEGREE) அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் இன்றைய காலத்தை துணிச்சலோடு எதிர்கொள்வதற்கும், இங்கு படிக்கக்கூடிய 3ஆண்டுகளை சரியான முறையில் பயன்படுத்துவதற்காக கூடுதலாக 3 பட்டயப்படிப்பு (Diploma Courses), 6 சான்றிதழ் படிப்பு (Certificate Courses), 6 inter -discipline courses வழங்கலாம் என்ற திட்டமும் இருக்கின்றது. இதன் மூலமாக மார்க்கத்தை அடிப்படையாக கொண்டு மற்றதுறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குவதற்கு அறிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை .

அல் பய்யினாஹ் பள்ளி கல்வி சேவை சிறந்து விளங்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal