துபாயில் சிறிய சிகரெட் துண்டும் உங்களுக்கு 500 திர்ஹம் இழப்பை உண்டாக்கலாம்…

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தூய்மையை பேண பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு அதிநவீன சாதனங்களும், குப்பைத்தொட்டிகளும் பயன்பாட்டில் உள்ளது.

தூய்மை என்பது சமூகத்தின் மிக முக்கியமான அம்சமாக இருப்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக  வைப்பதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு என்பது   இன்றியமையாத செயலில் ஒன்றாக உள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள துபாய் அரசு தொடர்ச்சியாக பல முயற்சிகளும், பல  சட்டங்களும் இயற்றியுள்ளது.

சமீபத்தில் நகரை  அசுத்தம் செய்யும் வகையில் புகைப்பிடித்து விட்டு சிகரேட் துண்டுகளை போடுவது, காகித துண்டுகளை போடுவது, பொது  இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபவர்களுக்கு அபராதமாக 500 திர்ஹம் விதிக்கப்படும் என்று பொது இடங்களில்  அறிவிப்பு  பலகை வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இச்சட்டத்தை  மீறுபவர்களை கண்கானிக்க நகர் முழுவதும்  சிறப்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..