நகராட்சியை நவீன படுத்த வந்த உபகரணங்கள், நலிந்து கிடக்கும் அவலம்..

கீழக்கரை நகராட்சியின் சுகாதாரம்தை மேன்படுத்த போவதாக அறிவித்து, அதற்கான நவீன கம்பெக்டர் வாகனம் மற்றும் நவீன ?? குப்பைக் கொட்டும் தொட்டிகளும் பல லட்சம் ரூபாய் செலவில் வந்திறங்கி, நகராட்சி ஆணையரால் அத்திட்டம் தொடங்கியும் வைக்கப்பட்டது.

ஆனால் இத்திட்டம் தொடங்கி சில தினங்களிலேயே மக்கள் பெரும் அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள், காரணம் முறையான பயிற்சி எடுக்காமல் கம்பெக்டர் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளுவதால், கழிவுகள் சாலைகளிலும் சிந்துகிறது. அதே போல் 4 சக்கரங்களுடன் வாங்கப்பட்ட குப்பை கொட்டும் தொட்டிகளில் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தொட்டிகளில் சக்கரங்களை காணவில்லை.

இத்திட்டம் மக்களின் சேவைக்காக கொண்டு வரப்பட்டதா அல்லது அதிகாரிகளின் தேவைக்காக கொண்டுவரப்பட்டதா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

4 Comments

  1. சம்பளம் வாங்குகின்றோமே என்று பொறுப்புணர்வோடு செயல்படவில்லை என்றால் அதீநவீன இயந்திரமும் விரைவில் செயலிழந்துவிட்டது என்ற செய்தியும் உங்க தளத்தில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்..

  2. பைத்துல் மால் அருகில் சிறிய குப்பை தொட்டி வைக்க எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் நகராட்சி அதிகாரிகள் இதோ அதோ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் தவிர இன்றுவரை அவ்விடத்தில் குப்பை தொட்டி வைக்கவில்லை. கீழை நிவ்ஸ் இதை செய்தியாக வெளியிடுவீர்களா?

  3. செய்தி போட்டதும் வந்து வச்சிட்டு தான் மறு வேலை பாப்பாங்க.இந்த காதுல வாங்கி அந்த காதுல விடுவாங்க..

Comments are closed.