சென்னை புத்தக கண்காட்சிக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வருகை…

சென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியின் இறுதி நாளான இன்று (22-01-2018) கண்காட்சிக்கு ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் வருகை தந்தனர்.

தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அரங்கு எண.13ல் அமைந்துள்ள நிலவொளி பதிப்பகம் / கீழை பதிப்பகம் வருகை தந்தார். பேராசிரியருக்கு கீழை பதிப்பகத்தின் இயக்குனர் முஜம்மில் கீழை பதிப்பகத்தின் முதல் வெளியீடான “மொழிமின்” புத்தகத்தை வழங்கி கீழை பதிப்பகத்தின் செயல்பாடுகளை விளக்கினார். பேராசிரியரும் ஆர்வத்துடன் விபரங்களை கேட்டறிந்தார்.

மேலும் பேராசிரியருடன் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.