எச்.ராஜாவின் பேச்சை கண்டித்தும், கைது செய்ய கோரியும் தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயுப்கான் தலைமை வகித்து பேசும்போது, இந்து சகோதரர்கள் புனிதராக நினைக்கும் ஆண்டாள் குறித்து சர்ச்சையாக கருத்தை பாடாலசிரியர் வைரமுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பேசியுள்ள பாஜா வின் தேசிய செயலாளர் எச்.ராஜா முஸ்லிம்கள்தங்களது உயிருக்கும் மேலாகமதிகமாக மதிக்க கூடிய நபிகள் நாயகம் அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் இழிவு படுத்தும் விதமாக பேசி முஸ்லிம்களை சீண்டியுள்ளார்.

வைரமுத்துவை கண்டிக்கும் சாக்கில் நபிகள் நாயகத்தை பற்றி பேசி இஸ்லாம் மதத்தை வம்புக்கு இழுத்துள்ளார். எச்.ராஜாவின் கருத்திற்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கடும் கண்டனத்தையும் பதிவு செய்வதோடு அவருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கிறது. இந்து முஸ்லிம் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மாநில துணைத்தலைவர் அப்துல் கரீம், மாவட்ட செயலாளர் சாகுல், பொருளாளர் செய்யது அன்வர் அலி, துணைத்தலைவர் முகம்மது ஹனிபா, துணை செயலாளர் முகம்து இம்ரான்கான் உட்பட பலர் பேசினர். வடக்கு மாவட்ட செயலாளர் நைனா முகம்மது நன்றி தெரிவித்தார்.

Comments are closed.