Home செய்திகள் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

by ஆசிரியர்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை – தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள 250 தேசிய பசுமைப்படை அமைவுப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் 20.01.2018 சனிக்கிழமை நடைபெற்றது.  பயிற்சி முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் தலைமை வகித்தார்.

இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் டி.பிரேம் மற்றும் பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் முன்னிலை வகித்தார். இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர். முனைவர். எஸ். சோமசுந்தரம் மற்றும் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் எஸ். நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஆ.பெர்னாடிட் வரவேற்புரை ஆற்றினார். மேலும் பயிற்சி முகாமில் கருத்தாளர்களாக தேவகோட்டை. காந்திய சமூக கிராம முன்னேற்ற இயக்கத்தின் இயக்குனர் அருள்திரு. எ. சிரில் அடிகளார் “மனித உரிமைப் பார்வையில் இயற்கைப் பாதுகாப்பு ” என்ற தலைப்பிலும்,  இராமநாதபுரம்/மண்டபம் பகுதிகளின் வனச்சரக அலுவலர் எஸ். சதீஷ் “வனம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு” என்ற தலைப்பிலும், தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வருமான பா.தீனதயாளன் “மழைநீர் சேகரிப்பும், மரம் நடும் முறைகளும் “என்ற தலைப்பிலும், இராமநாதபுரம் இராஜா தினகர் ஆர். சி.உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆ.அந்தோணிதாஸ் “புவி வெப்பமயமாதல்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்.

இந்த பயிற்சி முகாமில் இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். இந்நிகழ்வில் கடந்த செப்டம்பர் மாதம் 2016-2017 – ம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற எல்.கருங்குளம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரும், தேசிய பசுமைப்படையின் ஒருங்கிணைப்பு ஆசிரியருமான எஸ்.பி.செந்தமிழ் செல்வி மற்றும் தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், இராஐர தினகர் ஆர். சி.உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியருமான ஆ.பெர்னாடிட்க்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

பயிற்சி முகாமிற்கான நிகழ்வுகள் அனைத்தையும் இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியை டி.எஸ்தர் வேணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய பசுமைப்படை ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பு ஆசிரியர் எஸ்.கருணாகரன் நன்றியுரை ஆற்றினார். பயிற்சி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!