Home செய்திகள் செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமம் நடத்திய வாழ்க்கை திறன் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சி – புகைப்படத் தொகுப்புடன்..

செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமம் நடத்திய வாழ்க்கை திறன் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சி – புகைப்படத் தொகுப்புடன்..

by ஆசிரியர்

கீழக்கரையில்,  நாகர்ஜுனா பல்கலைக்  கழகத்தால்  நடத்தப்படும் வாழ்க்கைத் திறன் சான்றிதழ் படிப்பின் முக்கியத்தும் மற்றும் சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக இன்று (20.01.2018) செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழக்கரை சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமம் சார்பாக வாழ்க்கை கலை மற்றும் மனித வள மேம்பாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை இளங்கலை இறுதியாண்டு மாணவர் அமீன் மீரா கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியின் தலைமை உரையை கல்லூரியின் முதல்வர் முனைவர் ரஜபுதீன் உரையாற்றினார். முதுகலை ஆங்கில துறையின் துணை பேராசிரியர் மோகன முருகன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியின் அறிமுக உரையினை கீழக்கரை சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமத்தின் ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் பேசினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமத்தின் இயக்குனர் முனைவர் ஹுசைன் பாஷா சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் நாட்டுநலப் பணிகள் அதிகாரி சுலைமான், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமம் கடந்த மாதம் கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (பீட்ஸா பேக்கரி கட்டிடத்தின் முதல் மாடியில்) தங்களது கிளை அலுவலகத்தை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தொகுப்பு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!