மலேசியாவில் உலக அமைதி, ஒற்றுமை, சமாதானத்தை முன்னிட்டு மாபெரும் மார்க்க நிகழ்ச்சி…

மலேசியா நாட்டின் முக்கியமான மாநிலமான பினாங்கு (தீவு) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கபிதான் கெலிங் பள்ளிவாசலில் அரசின் முழு ஆதரவுடன் மாபெரும் மார்க்க பிரார்த்தனை ஜனவரி மாதம் 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் இஷா தொழுகை வரை அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டத்தோ முஹம்மது ராஷித் பின் அஸ்னான் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வருகைதந்த தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் அருள்மொழி செல்வர் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி (பேராசிரியர்:உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்) உணர்ச்சி துடிப்பு மிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் (2000+) மேற்பட்ட சகோதர, சகோதரிகள் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட (200+) ரோஹிங்கியா சிறுவர்களும் உலக சமாதானம் இன ஒற்றுமைக்காக இறைவனை புகழ்ந்தும், இறைத்தூதர் மீது ஸலாத்தினை கூறியும் பிரார்த்தனை நடத்தினார்கள்.

உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் ஏற்பாடு செய்த மலேசிய அரசும், பினாங்கு மக்களும் பாராட்டுக்குரியவர்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..