Home செய்திகள் கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் கிக்-பாக்சிங்கிள் பல பதக்கங்கள் வென்று சாதனை -வீடியோ காட்சிகளுடன் ..

கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் கிக்-பாக்சிங்கிள் பல பதக்கங்கள் வென்று சாதனை -வீடியோ காட்சிகளுடன் ..

by ஆசிரியர்

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

இந்திய கி்க்-பாக்ஸிங் அமைப்புகளின் சங்கம் (Indian Association of Kickboxing Organization) சார்பில், மஹாராஷ்ட்ரா கிக்-பாக்ஸிங் அமைப்பின் (Kickboxing Association of Maharashtra) மூலம் புனே நகரில் ஜனவரி 10 முதல் 13 வரை 7-வது இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் (7th Indian Open National Champianship) நடைபெற்றது. பிரபல தெலுங்கு நடிகர் சுமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாட்டு அணிகளில் ஒன்றாக கலந்து கொண்ட கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களில் 13-15 வயது பிரிவில் செய்யது நஸ்ருதீன் (8-ஆம் வகுப்பு) தங்கப் பதக்கமும், அப்துல் ஆதில் (8-ஆம் வகுப்பு), முஹம்மது அஸ்லம் (8-ஆம் வகுப்பு) ஆகியோர் தலா ஒரு வெள்ளிப் பதக்கங்களும், 10-12 வயது பிரிவில் அல் ஃபாஸில் (6-ஆம் வகுப்பு) வெள்ளிப் பதக்கமும், ஜலால் (5-ஆம் வகுப்பு) ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும், 7-9 வயது பிரிவில் அஹமது அல் ஹாஸிர் (4-ஆம் வகுப்பு) ஒரு வெண்கலமும், ஃபாஸ் அப்துல் காதிர் (4-ஆம் வகுப்பு) இரண்டு வெண்கலப் பதக்கங்களும் ஆக மொத்தம் 9 பதக்கங்கள் வென்று தமிழ்நாடு பதக்கப் பட்டியலுக்கு வலு சேர்த்தனர்.

போட்டியின் இறுதியில் பதக்கப் பட்டியலில் மொத்தம் 109 பதக்கங்கள் வென்று மஹாராஷ்ட்ரா மாநிலம் முதலிடமும், 35 பதக்கங்கள் வென்று உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாமிடமும், 30 பதக்கங்கள் வென்று தமிழ்நாடு மூன்றாமிடமும் பெற்று வாகை சூடினர்.

பள்ளியின் தற்காப்புக்கலை பயிற்றுனர் திலக் கடல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளித்து உடன் சென்றிருந்தார். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரையும் முதல்வர் இராஜேஷ் குமார் கிருஷ்ணன், பள்ளி மேலாளர் அபுல் ஹஸன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், சக மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!