அமீரகத்திலும் தித்திப்பாக இனிக்கும் பொங்கல் திருவிழா.. வீடியோ ரிப்போர்ட் ..

பண்டைய தமிழரின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு சிறப்புகளை தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமே விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் திருநாள், இப்பொழுது உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் அமீரகத்தில் உள்ள துபாயில் இந்தியாவில் கொண்டாடப்படுவது போலவே விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

Click on K and Subscribe for Keelainews TV

பொங்கல் தினத்தன்று தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது அதில் ஏறு தழுவிதல், மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகளும் அடங்குகிறது.அதே போல் பொங்கல் என்று வந்து விட்டால் நம் நினைவுக்கு வருவது “கரும்பு” என்றே சொல்ல வேண்டும். உற்றார் உறவினர் மீது அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் கரும்பை பரிமாறுவதோடு குடும்பதோடும் உண்டு மகிழ்கிறார்கள்.

ஆனால் புலம்பெயர்ந்து வாழும் அமீரக தமிழர்கள் பொங்கல் திருநாளை செய்தியாக மட்டுமே கண்டு களித்த தமிழர்களின் குறையை தீர்க்கும் வண்ணம் துபாயில் உள்ள பெருமாள் கடை (பெருமாள் பூக்கடை, அல் கிசஸ் பகுதி, டமாஸ்கஸ் ரோடு)  இந்தியாவில் கிடைக்கும் அனைத்து வகையான பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் வருடா வருடம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதோ ஒரு நேரடி ரிப்போர்ட் …

1 Comment

Comments are closed.