கடந்த வருடம் கேட்ட கேள்விக்கு பதில் தர தகவல் உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு..

கடந்த நவம்பர்.17, 2016ம் ஆண்டு கீழக்கரை நகராட்சியிடம் ஒரே ஒரு கேள்வி என்று கீழக்கரையில் உள்ள பல பிரச்சினைகளுக்கான விளக்கம் கேட்டு கீழக்கரை சட்டப்போராளிகள் சார்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதற்கான விளக்கமான பதில் கிடைக்கவில்லை.

அந்த கேள்வியை ஒட்டி மேல்முறையீடும் செய்யப்பட்டது, ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க படாமலே இருந்தது. அதே சமயம் மனுக்கள் மூலமாக மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், விடாமுயற்சியாக இன்று(11-01-2018) சட்டப்போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைன் சென்னையில் உள்ள சென்னை தகவல் ஆணையத்திடம் கிடப்பில் இருக்கும் மனுவை உடனே விசாரிக்க எடுக்குமாறு மேல் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இம்மனுக்களை பொங்கல் விடுமுறை கழிந்தவுடன் விசாரனைக்கு எடுத்துக் கொள்வதாக அதிகாரிகளும் வாக்களித்துள்ளார்கள். நாமும் சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவோம். கடந்த வருடம் கீழை நியூஸ் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி கீழே:-

http://keelainews.com/2016/11/30/one-question/

புனித ரமலான் வாழ்த்துக்கள்..