கீழக்கரை நகர் நல இயக்க சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் ….

கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த பல வருடங்களாக மக்களுக்கு பல் வேறான சேவைகள் செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றனர்.

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொது சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நகர் நல இயக்கத்துக்கு இந்த வருடத்திற்கான சிறந்த பொது சேவைக்கான விருதினை வழங்கினர். இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர் ஹாஜா அனீஸ், மீனாட்சி மிஷன் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் காசி விசுவானதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த விருதை கீழக்கரை நகர் நல இயக்கம் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

———-///————‘