குளிர் பிரதேசத்தை கீழக்கரைக்கு கொண்டு வந்த அல் பையினா பள்ளி…

உலகம் முழுவதும் இந்த வருடம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பனி மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த பனி மழை கீழக்கரைக்கும் வந்துவிட்டதோ என ஆச்சர்யமூட்டும் வகையில் கீழக்கரை அல்பையினா பள்ளி மாணவச் செல்வங்கள் தங்கள் கை வண்ணத்தால் பனி மழையை பள்ளியின் வளாகத்திற்கே கொண்டு வந்து விட்டனர்.

11-01-2018 அன்று அல்பையினா பள்ளியில் “Bayyinah’s Winter Wonderland” என்ற பெயரில் குளிர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் கைவண்ணத்தில் பல வகையான படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் குளிர் காலங்களில் பேண வேண்டிய முறைகள், மலை பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் விதமான செய்முறைகளும் விளக்கப்பட்டிருந்தது.  இக்காண்காட்சியில் போட்டிகளும் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நிகழ்ச்சி தொடர்பான வார்த்தை பிரயோக பயிற்சியும் நிகழ்ச்சியின் மூலமாக வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்களும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டார்கள்.

புகைப்படத் தொகுப்பு

————-///————-