பள்ளிக்கு 50 மரக்கன்றுகள் நடும் திட்டம்…

தமிழகத்தில் பசுமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்குவித்தது வருகிறது. அதன் அடிப்படையில் ஓவ்வொரு அரசு பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 50 மரங்களை நடும் திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 10.01.2018 புதன் அன்று காலை 10 மணியளவில் இராமநாதபுரம் யூனியனில் உள்ள L.கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வி அவர்கள் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியப்பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

——-////——-