கீழக்கரையில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சொகுசு பேருந்து…

சென்னைக்கு கீழக்கரையில் இருந்து பல நிறுவனங்கள் பேருந்து சேவை செய்து வருகின்றனர். அதையும் தாண்டி ராமநாதபுரத்தில் இருந்து தினமும் இரண்டு ரயில் சேவையும் உள்ளது. ஆனால் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை தினம், தினம் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு “ஷாமா சர்தார் டிராவல்ஸ்” நிறுவனம் படுக்கை வசதி மற்றும் ஏ.சி வசதியுடன் சென்னைக்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர்.

இந்த சேவையின் குறிப்பிட்ட அம்சம், இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதாகும்.  இதனால் அதிக கூட்டம் இல்லாத நாட்களினல் பயணிகளுக்கு வசதியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில்  பயணச்சீட்டு பெற வாய்ப்புள்ளது.  மேலும் டிக்கட் விலையும் பதிவு செய்யும் தேரத்திலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களுடைய தொழில் மென்மேலும் வளர கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

———-////———