கீழக்கரை அலையோசை சாரலாக ஒலித்தது துபாய் 89.4FM ரேடியோவில் …

துபாய்க்கு வேலை தேடி சென்றவர்கள் சூழ்நிலையின் காரணமாக முழு நேரமும் வேலை, சம்பாத்தியம் என்று காலம் கடந்தவர்கள் பலர். ஆனால் அந்த வேலை பளூவிலும் சமூக சேவையின் மூலம் முத்திரை பதித்தவர்கள் சிலர். ஆங்கிலத்தல் சொல்வதென்றால் “BEST OUT OF LOT”. அவ்வாறு முத்திரை பதித்தவர்தான் கீழக்கரையைச் சார்ந்த நஜீம்.

கீழக்கரையை சார்ந்த நஜீம் ஐக்கிய அரபு நாட்டில் அரேபியா ஹோல்டிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பிறந்த மண்ணாகிய கீழக்கரையிலும் சமூக அக்கறையுடன் தான் வந்த சமுதாயம் மேன்பட வேண்டும் என்ற நோக்கில் சமீபத்தில் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை ஆரம்பம் ஆக உறுதுணையாக இருந்து, அதன் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

நஜீம் அமீரகத்திற்கு அலுவலக பணியாளாக வந்து இன்று மேலாளர் நிலைக்கு வந்தாலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சமூக பணியாற்ற பயன்படுத்தி கொள்ள தவறியதில்லை.

இந்த புதுவருட ஆரம்பத்தில் நஜீமுடைய சமூக சிந்தனை மற்றும் சேவையை மக்களுக்கும் உணர்த்தும் விதமாக துபாய் 89.4FM நடத்தும் “சாரல்-அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை தான் உழைத்து, முயற்சித்து, நடந்து, கடந்து, உயர்ந்த விதத்தை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாடலில் மைய கருத்தாக தான் குறைவான ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்தாலும், கிடைத்த வருமானத்தில் அலுவலக நிர்வாக பயிற்சி, கணிணி பயிற்சி, பட்டப்படிப்பை நிறைவுபடுத்தி பணியில் முன்னேற்றம் அடைந்ததை விளக்கியது, வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு, கலந்துரையாடலுக்கே இக்கருத்து முத்தாய்ப்பாய் மகுடம் சூட்டியது போல் இருந்தது என்றால் மிகையாகாது. இந்நிகழ்ச்சியில் அவர் தன் நண்பர்களின் ஊக்கத்தாலும், ஓத்துழைப்பாலும் தன்னுடைய நீண்ட நாள் சமூகப்பணியின் கனவுத் திட்டமான 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையும் உருவானது என்பதை நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்து சென்றாலும் தன் சொந்த ஊரையும், தன்னை உயர்த்தியவர்களையும் உயர்த்தும் நஜீம் நிச்சயமாக பாராட்டுக்குரியவர் என்பதில் ஜயமேதுமில்லை.

அவர் ரேடியோவில் வீசிய சாரல் அலை சில உங்கள் செவிகளுக்காக கீழே..


—————————————————————

4 Comments

  1. மாஷா அல்லாஹ்…. உழைப்பே உயர்வுதரும்…
    அருமை Bro. நஜீம் வாழ்த்துக்கள்

  2. இவர் நஜீம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்தான் நமதூர் கீழக்கரை மேல் அதிகம் பற்றுள்ளவர்.

    ஆனால் ஒரு தெருவாசியை முக்கியத்துவம் கொடுத்து பேசுவார்.

    (அவசியம் கருதி வார்த்தையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது),

Leave a Reply

Your email address will not be published.