கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வும், கவனமும் தேவை – காலாவதியான பொருட்கள் கடைகளில் விற்பனை..

ஏமாறாமல் இருப்பதற்கும்,  ஏமாற்றப்படாமல் இருப்பதற்கும் நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும்.  பரபரப்பான இந்த கால கட்டத்தில் பெரும்பாலான நுகர்வோர்கள் அடிப்படையான விசயத்தில் கூட கவனம் செலுத்துவதில்லை.  விற்பானையாளர் மீதுள்ள  அதீத நம்பிக்கையின் நாம் வாங்கும் பொருட்கள் சில நேரங்களில் காலாவதியான உணவுப் பொருட்களாகி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகிறது.  இந்த செயல்பாட்டில் வணிகம் செய்பவரை மட்டும் குறை கூற முடியாது,  ஆனால் அதே சமயம் ஒரு பொருளை வாங்கும் பொழுது அப்பொருள் எல்லா விதத்திலும் உபயோகத்திற்கு தகுதியானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்குவது நுகர்வோரின் கடமையாகும்.  அக்கடமையில் இருந்து தவறும் பொழுது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுகிறார்கள்.

அதே சமயம் ஒவ்வொரு நுகர்வோரும் எந்த ஒரு   வணிகர் சட்டத்திற்கு புறமான செயல்பாட்டில் ஈடுபடுவதைக் கண்டால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  அவ்வாறு கொண்டு செல்லும் பட்சத்திலேயே நுகர்வோரும் பாதுகாக்கப்படுகிறார்,  வணிகரும் சீர் செய்யப்படுகிறார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் வாங்கப்பட்ட பிரபலமான கடையில் பிரசித்த பெற்ற நிறுவனத்தின் உணவுப் பொருளை வாங்கிய பொருள் காலாவதியாகி இருந்தது அடையாளம் காணப்பட்டது.  ஆனால் காலாவதியான பொருள் என்பதை அறியாமலேயே அந்த வியாபாரியும் விற்றார் என்பதுதான் வேதனையான விசயம்.  இதற்கு காரணம் வியாபாரம் செய்பவருக்கும் அப்பொருளின் காலாவதி பற்றி அறிந்து கொள்ள ஈடுபாடு இல்லை மற்றும் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வு நிர்வாகமும் முறைப்படி கடைகளில் பொருட்கள் விற்கப்படுகிறதா என்ற சோதனையை சம கால இடைவெளியில் நடத்தப்படாததும் ஒரு முக்கிய காரணம்.

அன்பர்களே எந்த பொருள் வாங்கினாலும் அதன் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதியையும் சரி பார்த்து வாங்குங்கள்.  உங்களுக்கு தெரிந்து நடக்கும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.  இதன் மூலம் நீங்களும், நம் சமுதாயமும் தீமைகளில் இருந்து காப்பாற்ற படலாம்.

———///——–

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. We should keep awareness to our people regarding this…
    This is health issues n we should tell all shopkeeper’s not keep this kind of expiry item in their shop…

Comments are closed.