கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம்.

​கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், சென்னை பேனியன் டெக்னாலஜி சொலுசன் இயக்குநர் மீரான் மற்றும் ஜெனரல் மேனேஜர் சலீம் முன்னிலையிலும் நடைபெற்றது.

​கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி பிலால் அனைவரையும் வரவேற்றார். கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மெகா வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பல்வேறு பொறியியல் துறைகளைச் சோர்ந்த 454 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பேனியன் டெக்னாலஜி சொலுசன​் சார்பாக KLR GLIBAL INC மனிதவள மேம்பாட்டு அதிகாரி சந்தோஷ் மற்றும் செந்தில் TEAM LEASE மனிதவள மேம்பாட்டு அதிகாரி ரூபேஷ் குமார், MAGUS CUSTOMER DIALOGUE மனிதவள மேம்பாட்டு அதிகாரி சங்கர், OM INNOVATION TECHNOLOGY PVT.LTD, BERZIA TECH மற்றும் DYNAMATIC TECHNOGY PVT LTD போன்ற கம்பெனிகள் கலந்து கொண்டு தங்கள் கம்பெனிகளுக்கு தேவையான 306 மாணவர்களை தேர்வு செய்தனர்.

இதில் AERONAUTICAL 30 மாணவர்களும், CHEMICAL துறை 37 மாணவர்களும், CIVIL துறை 63 மாணவர்கள், CSE 42 மாணவர்களும், ECE 63 மாணவர்களும்; EEE 53 மாணவர்களும், IT 12 மாணவர்களும், MECHANICAL 100 மாணவர்களும், MBA 29 மாணவர்களும், MCA 25 மாணவர்களும். தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 306 மாணவர்களுக்கான பணி நியமன ஆணையினை கல்லூரி முதல்வர் மற்றும் சென்னை பேனியன் டெக்னாலஜி சொலுசன் இயக்குநர் மற்றும் ஜெனரல் மேனேஜர் மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஆகியோர் வழங்கினார்கள். நன்றியுரை கல்லூரி துணை முதல்வர் முனைவர் அழகிய மீனாள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் செய்திருந்தார். ———————————————————————-

புனித ரமலான் வாழ்த்துக்கள்..