கடந்த 6 வருடங்களாக நிஷா பவுன்டேசன் நடத்தி வரும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பேரணி..

கீழ்க்கரையில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நிஷா பவுன்டேசன் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து சுற்றுப் புற சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.  இந்தப் பேரணி மூலம் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அசுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுவதை மக்கள் மத்தியில் விளக்கும் விதமாக வீதிகளில் பேனர்கள் மற்றும் ஒலிப்பெருக்கிளகள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது சம்பந்தமாக நிஷா பவுன்டேனசன் சேர்மன் சித்திக் கூறுகையில் எங்கள் அமைப்ப மூலமாக கடந்த வருடங்களாக பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து இப்பணியினை செய்து வருகிறோம்.  மேலும் அம்மா அழைப்பு மையம் மூலமாகவும் 100கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு தற்சமயம் நகராட்சி மூலமாக ஆஸ்துமா வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பேவர் ப்ளாக் சாலைகளில் உள்ள தூசிகளுகம் குப்பைகளும் அகற்றப்பட்டு வருகிறது.  அதற்காக நாங்கள் கீழக்கரை நகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்.