15-01-2018 அன்று மக்கள் பாதை சார்பாக உச்சிநத்தம் சூரங்குடி அருகே சமத்துவ பொங்கல்..

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிநத்தம், சூரங்குடி அருகே உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நேர்மையாளர் உ.சகாயம் IAS வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை ப்ரண்டஸ் சர்வீஸ் கிளப், கலாம் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குருதி கொடை முகாம் (Blood Donation Camp), மரக்கன்றுகள் நடுதல், மக்கள் பாதையின் திட்ட விளக்கக்கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்கள் , தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பாதை தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.