அல் பையினா பள்ளியில் அறிவியல் கண்காட்சி – அறிவியல் பூர்வமான இஸ்லாமிய பார்வை..

கீழக்கரை அல் பையினா பள்ளியில் 03-01-2018  அன்று பள்ளி வளாகத்தில் அறிவியல் மற்றும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை அனைவருடைய பார்வைக்காகவும் வைத்திருந்தனர். இந்த கண்காட்சியை பற்றி பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் கூறுகையில், “இந்தக் கண்காட்சி மாணவர்களின் அறிவுத் திறன் மற்றும் ஆளுமைத் திறனையும் வளர்க்க உதவுகிறது. மேலும் இந்த கண்காட்சி அறிவியல் என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், இஸ்லாத்தின் குர்ஆன் கூறும் சித்தாந்தந்தங்களை அறிவியல் ரீதியாக நடைமுறை படுத்துவதின் சாத்தியங்களையும், அறிவுத்திறனையும் வளர்க்கும் விதமாக கண்காட்சி எற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்தக் கண்காட்சியில் அல் பையினா அகாடமி இஸ்லாமிய கல்லூரி மாணவிகளும் இஸ்லாமிய கண்காட்சிகளுக்கான பங்களிப்பை வழங்கி இருந்தனர். இக்கண்காட்சிக்கு ஏராளமான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வருகை புரிந்தனர்.

புகைப்படத் தொகுப்பு