பயனில்லாமல் தெருக்களில் தொங்கும் தொலைபேசி வயர்களின் நிலை என்ன??

கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு சாதாராண தொலைபேசி மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்த நிலையில் இன்று 90 சதவீதத்திற்கும் மேலான வீடுகளில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு அலைபேசிக்கு மாறிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை.

ஆனால் தொலைபேசி இல்லாத தெருக்களில் கூட அதற்காக பயன்படுத்தப்பட்ட வயர்கள் அதனுடைய சந்தை மதிப்பு அறியாமல் தொங்கிய நிலையில் உள்ளது. பல இடங்களில் கேபிள் டி.வி வயர்களும் பழைய தொலைபேசி வயர்களும் அடையாளம் தெரியாத அளவு பிண்ணி பினைந்து கிடக்கின்றன. ஆகையால் பல நேரங்களில் கேபிள் வயர் என தொலைபேசி வயர்களும் அறுக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் தொலைபேசிகள் பயன்பாட்டில் இல்லாததால் அதனுடைய பாதிப்பு யாருக்கும் தெரிவதில்லை.

இன்று அதற்கு மாற்றமாக அகமது தெருவில் தொலைபேசி நிறுவன ஊழியர் தவறுதலாக கேபிள் வயர்களை வெட்டியதால், ஞாயிறு விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் தடைபட்டதில் பெண்கள் பரபரப்புக்கு ஆளாகிவிட்டார்கள்.

ஆனால் சரி செய்ய வேண்டிய வயர்கள் சிறிது சிறிதாக சமூக விரோதிகளாலும் திருடப்பட்டு விற்கப்படுவதாகவும் பரவலாக மக்கள் மத்தியில் கருத்து பரவுகிறது. பயன்பாட்டில் இல்லாத விலைமதிப்புள்ள வயர்கள் முழுமையாக சமூக விரோதிகளின் கை வண்ணத்தால் மறைந்து போகும் முன்பு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.