Home கல்வி மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி…

மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி…

by ஆசிரியர்

கல்வி மட்டுமே உலகத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் இது நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள்.  இந்த வார்த்தைகளை மெய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனம் தான் THE BISHOP’S MODEL UNITED NATION  ஆகும். இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை ஒன்று திரட்டி ஐக்கிய அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை போலவே உலகில் நடைபெறும் அன்றாட விசயங்களை கலந்துரையாட செய்து மாணவர்களை தயார் செய்கிறார்கள்.

இந்நிகழ்வு வருடந்தோறும் இந்தியாவில் பல இடங்களில் நடைபெறும். இதில் பல முன்னனி பள்ளிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த வருடத்தின் (2018) முதல் நிகழ்வாக புனே நகரில் MODEL UNITED NATION  நிகழ்வு நடைபெற்றது.  இதில் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.  இந்த நிகழ்வில் இரண்டு நிலையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.  7 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு FUNDAMENTAL BRACKET  என்ற நிலை பயிற்சி கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.  இதில் கீழ்கண்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது:-

  • GA1 – Disarment & International Security  (அணு ஆயதத்தால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள்.)
  • GA2 – Economical & Financial Committee (வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு)
  • GA3 – Social Humanitarian & Cultural community (மக்கள் உரிமை மற்றும் சுயாட்சி)
  • United Nation Commission on Status of women (பெண்கள் உரிமை.)
  • United Nation Commission Crime Prevention & Criminal Justice. (குற்றத்தடுப்பும் அதன் நீதியும்.)

அதே போல் மேல்நிலைப் பள்ளி முதல் கல்லூரி மாணவர்களுக்கு  PROGRESSIVE BRACKET   என்ற நிலை பயிற்சி கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.  இதில் கீழ்கண்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது:-

  • United Nations Human Right Council. (மனித உரிமை சட்டம்.) United Nations Counter Terrorism Committee (தீவிரவாத தடுப்புச் சட்டம்.)
  • United Nations Disarment Commission (அணு ஆயத தடுப்புசி சட்டம்.)

இந்த பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் உலக விசயங்கள் மற்றும் அரசியலை அறிந்து கொள்வதோடு, கலந்து கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளும்  மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இப்பயிற்சியில் பங்கு பெற்ற கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்களை கீழை நியூஸ் நிர்வாகம் பாராட்டுகிறது.

TS 7 Lungies

You may also like

1 comment

Anonymous January 7, 2018 - 8:45 pm

I can proudly say that they are my friends because iam also the same school student.
They really done a great job

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!