சுற்றுப்புற சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் – ஒரு பார்வை.

ஐக்கிய அரபு அமீரகம் எல்லா நிலையிலும் சுகாதாரத்தை பேணுவதில் முன்னிலை வகிக்கும், அதே போல் சூழலை பேண தவறும் நபர்களை கூட அந்நாட்டின் சட்ட திட்டம் சுகாதாரத்தை பேண வைத்து விடும்.

உதாரணமாக ராசல் கைமா அமீரகத்தில் உள்ள அல் ஜையிஸ் மலைப்பகுதியில் தினமும், அதிலும் முக்கியமாக விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருவதுண்டு. வரும் மக்கள் குப்பைகளை கீழே போட்டு அசுத்தப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதிக்குள் நுழையும் பொழுதே நகராட்சி சார்பாக குப்பைகள் கொட்டுவதற்கான பைகளை வருகையாளர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

அதுபோல் சுகாதாரத்தை பேண வேண்டிய அவசியத்தையும் மக்கள் படிக்கும் விதமாக அறிவிப்பு பலகையில் பதிந்து வைத்துள்ளார்கள். இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தும் சில மக்கள் குப்பைகளை கீழே எறிந்து விட்டு செல்வதுதான் மிகவும் வேதனையான விசயம்.