கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரமும், கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 47730 ஆகும். அதில் ஆண்கள் எண்ணிக்கை 25392 , பெண்கள் எண்ணிக்கை 22338. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு வரையறை வார்டு பட்டியலில் கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டைய மொத்த மக்கள் தொகை 38355 என்று குறிப்பிடப்பட்டு ஜனநாயக மரபுகளுக்கு புறம்பாக மறு வரையறை வார்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. (குளறுபடிகள் சிவப்பில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).

இவ்வளவு குளறுபடிகளையும் உண்டாக்கியதோடு, அதை நியாயப்படுத்தும் வகையில் தாங்களும் இதே ஊரைச் சார்ந்தவர்கள்தான் எங்களுக்கும் அக்கறை உள்ளது என கூறி நடந்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பதும் பொதுமக்களை திசை திருப்ப முயற்சிப்பதும், மிகவும் கண்டிக்கதக்கதாகும். மேலும் மாவட்ட ஆட்சியரே அனைத்து அமைப்புகளின் புகார் மனுவை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கும் நிலையில், இதுபோன்று திசை திருப்பும் பேச்சுக்கள் பொதுமக்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் என்ற கண்டத்தையும் சட்டப்போராளி குழும ஒருங்கிணைப்பாளர் பதிந்தார். (இணைதளம் சென்று பார்க்க கூடிய வீடியோ வழிகாட்டியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

இதனால் ஏறத்தாழ சுமார் 10000 கீழக்கரை நகராட்சி பகுதியை சார்ந்த மக்கள் கீழக்கரை வரைபடத்தில் இருந்து ஒரே நாளில் காணாமல் போயுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே ஆவணங்களில் காணாமல் போன மக்களை, மாவட்ட நிருவாக அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு கண்டுபிடித்து தர வேண்டும். மேலும் 10000 கீழக்கரை மக்களை ஒரே நாளில் தொலைத்த அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்” என்று கீழக்கரை சட்டப் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 Trackbacks / Pingbacks

  1. வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் 'பிப்ரவரி 6' ந
  2. கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்

Comments are closed.