ஜமாத்துல் உலாமா சபையின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்..

இன்று (05-01-2018) திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம் மற்றும் தமிழகம் முழுவதும்  அரசின் இஸ்லாமிய எதிர்ப்பு போக்கை கண்டித்து கண்டனப் போராட்டமும், ஷரீஅத் விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இந்ந மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான உலாமா பெருமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த அனைத்து பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்பாட்டத்தை ஆதரித்து பல் வேறு இஸ்லாமியா அமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டு முத்தலாக் தடை சட்டத்தின் எதிர்ப்பு மற்றும் ஷரீத் விளக்கங்களையும் அளித்தனர்.

கீழக்கரை SDPI, தமுமுக மற்றும் பல  கட்சி சார்பாகவும் உலாமக்களை திரட்டிக் கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய இராமநாதபுரம் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சார்ந்தவர்கள் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்வதில் போக்குவரத்து காவல்துறையுடன் கை கோர்த்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

.