இன்று (05.01.2018) முதல் துபாய் ஜுமைரா லேக் டவரிலிருந்து (Jumairah Lake Tower) இப்னு பட்டுட்டா (Ibn Battuta ) வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்.

துபாயில் இன்று (05.01.2018) முதல் 2019 ஆண்டு மத்தியில் வரை ரெட் லைனில் (Red Line) இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமும் அலுவலகம் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரெட் மற்றும் கிரீன் லைனில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. ரெட் லைன் வழியாக ரஷீதியாவிலிருந்து (Rashidiya) ஜெபல் அலி யூஏஈ எகஸ்சேஞ் (Jebal Ali UAE Exchange) வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.

தற்போது ஜுமைரா லேக் டவரில் (Jumairah Lake Tower) இருந்து இப்னு பட்டுட்டா ( Ibn Battuta) நிலையம் வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஜுமைரா லேக் டவரில் (Jumairah Lake Tower) இருந்து இப்னு பட்டுட்டா (Inbu Battuta) வரை செல்லும் பயணிகளுக்கு இலவச பஸ் வசதியும் ஏற்பட்டுள்ளது.

அதே போல் ரஷீதியா (Rashidiya) சொல்லும் பயணிகளுக்கு ஏதுவாக இப்னு பட்டுட்டா ( Ibn Battuta) நிலையத்திலிருந்து ஜுமைரா லேக் டவர் (Jumairah Lake Tower) வரை இலவச பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020 எக்ஸ்போவை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.