அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் கீழக்கரை பேருந்து நிலையம் ..

தமிழகத்தில் நேற்று முதல் (04-01-2018) அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தமிழகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது.

பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் முதல் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் வரை வீடு திரும்ப முடியாமல் தத்தளித்த வண்ணம் உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் கீழக்கரை பகுதியிலும் அரசு போக்குவரத்து எதுவும் இல்லை. சில தனியார் பேருந்துகள் மட்டுமே செயல்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் பேருந்து நிலையமே வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உதவாமல் மக்களிடன் தனியார் பேருந்துகளால் அதிக தொகை வசூலிக்கும் அவலமும் ஒரு புறம் அரங்கேறி வருகிறது.