ஆடல், பாடலுடன் கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கீழக்கரையில் இன்று (05-01-2018) நகராட்சி சார்பாக முக்கிய வீதிகளான பஜார் பகுதி, சின்னக்கடை தெரு மற்றும் பல பகுதிகளில் ஆடல், பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திடக்கழிவு மேலாண்மை, தரம் பிரித்தல், கழிப்பறைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு விளக்கங்களை “முழு சுகாதாரம் தமிழகம் – தூய்மை இந்தியா திட்டம் 2018” என்ற தலைப்பில் செயல்படுத்தி வருகின்றனர்.

இக்கலை நிகழ்ச்சிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து அன்னை கம்சலை கலைக் குழுவினர் நடத்தி வருகின்றனர்.