பள்ளி மாணவி திடீர் மரணம்…. துயர சம்பவம்…

கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நான்காம் வகுப்பில் பயிலும், கீழக்கரை லெட்சுமிபுரத்தை சார்ந்த யாழினி என்ற மாணவி நேற்று இரவு வீட்டில் விளையாடிகொண்டிருக்கும் பொழுது மயங்கி விழுந்து திடீரென்று மரணமடைந்தார். அம்மாணவியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று முகைதீனியா பள்ளியில் அனைத்து மாணவ மாணவியர், ஆசிரியர்கள்,மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்பட அனைவர்களாலும் மரணமடைந்த மாணவிக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பள்ளியின் நிர்வாகக்குழுவினர் மற்றும் முதல்வர், ஆசிரியைகள் ஆகியோர் அம்மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.