Home செய்திகள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுர மாவட்ட அவசரக்கூட்டம்..

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுர மாவட்ட அவசரக்கூட்டம்..

by ஆசிரியர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் 02-01-18 காலை 10.30 மணிஅளவில் இராமநாதபுரம் வருவாய்த்துறை அலுவலர் மனமகிழ் மன்றக்கூடத்தில் நடைபெற்றது. அதில் முக்கிய அவசரப் பிரச்சினையாக 01-01-2018 அன்று உத்திரகோசமங்கை கோவிலில் காவல்துறை அதிகாரியின் செயல்பாடுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இன்று (03-01-2018) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தீர்மான விபரங்கள் கீழே:-

தீர்மானம்-1

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கையில் 01-01-18ல் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் விழாவில் சட்டம் ஒழுங்கு மற்றும் முக்கிய பிரமுகர் பணி பார்த்து கொண்டிருந்த கீழக்கரை தாலுகா நிர்வாக மேஜிஸ்திரேட் மற்றும் தாசில்தாரும் ஆன திரு ஆ கணேசன் என்பவரை ஒருமையில் தரக்குறைவாக பேசி நாக்கைத் துருத்தி அடிக்க பாய்ந்த இராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு வெள்ளைத்துரை அவர்களது கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு காக்கத் தவறிய செயல்பாட்டிற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்-2

*இராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிபப்பாளர் அவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காக்க தவறியசெயலை சுட்டிக்காட்டி தனக்கு நியாயம்வழங்கக் கேட்டு இராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது கீழக்கரை தாலுகா மேஜிஸ்திரேட் மற்றும் தாசில்தார் காவல் துறை நிலை ஆணை151ன் கீழ் மேல் நடவடிக்கை எடுக்க கோரிய மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தீர்மானம்-3

*சம்பவம் நடந்து 40 மணிநேரத்திற்கு மேலாக ஆகியும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்நேர்வில் மேல்நடவவடிக்கை எடுக்க கேட்டும் மற்றும் உயிர் உடமை மற்றும் பணிபாதுகாப்பு வழங்க கேட்டும் 03-01-18 அன்று மதிய உணவு நேரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் மாலை 05.45 அனைத்து வட்டத் தலைநகரங்களில் உள்ள வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கோரிக்கை விளக்க வாயில் கூட்டம் நடத்துவது எனவும்,

தீர்மானம்-4.

நமது உணர்வுகளை மதிக்க தவறினால் சூழ்நிலைக்கேற்ப இயக்க நடவடிக்கைளை மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்வது எனவும்,

தீர்மானம்-5 02-01-18 ல் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வடித்தெடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்குவது எனவும் தீர்மானங்களை பரிசீலனை செய்து எதிர்வரும் 03-01-18 மாலை 05.45க்குள் மாவட்ட நிர்வாகம் தீர்வு காண தவறும்பட்சத்தில் 03-01-18 மாலை 06.00 மணி அளவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகள் மேற் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கூட்டத்தின் தீர்மானங்களை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எம்.தமிம்ராஜா வெளியிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!