மாற்றத்தை உண்டாக்கிய 100 இளைஞர்களில் கீழக்கரை இளைஞரும் ஒருவர்….

“நீங்கள் நூறு இளைஞர்களைக் கொண்டு வாருங்கள் இந்த தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்”,  இது சுவாமி விவேகானந்தா கூறிய அற்புத வார்த்தைகளாகும்.  இந்த வார்த்தைக்கு உயிர் கொடுக்கம் விதமாக புதிய தலைமுறை தொலைக் காட்சி மற்றும் GANDHI WORLD FOUNDATION என்ற அமைப்பும் சேர்ந்து தமிழகத்தில் அந்த 100 இளைஞர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தேர்வுக்காக தமிழகத்தில் பல்வேறு துறைகளில் மற்றும் சமூக மாற்றத்திற்காக பாடுபடும் இளைஞர்களிடம் இருந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட  விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  அதில் பல்வேறு துறைகளில் மாற்றங்களை கொண்டு வந்த அல்லது கொண்டு வர பாடுபட்டுக் கொண்டிருக்கும் 100 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று (04-01-2018) காலை சென்னை காமராஜர் அரங்கில் அவர்களுக்கு பாராட்டும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த 100 நபர்களில் கீழக்கரையைச் சார்ந்த கீழக்கரை க்ளாசிஃபைட் எஸ்.கே.வி. சேக் ஒருவராக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவதில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இத்தருணத்தில் சகோதரர் எஸ்.கே.வி. சேக் அவர்களை பாராட்டுவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது.

1 Comment

Comments are closed.