Home செய்திகள் கீழக்கரையில் வார்டு மறுவரையறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

கீழக்கரையில் வார்டு மறுவரையறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

by ஆசிரியர்

கீழக்கரை வார்டுகள் மறு வரையறை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் இயகக்ங்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று ஹூசைனியா மஹாலில் 01.01.2018 மாலை 6.50 மணிக்கு நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரவேற்புரையை மக்கள் டீம் காதர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை கீழை அஸ்ரப் நகர் தலைவர் (SDPI.கட்சி) தொகுத்து வழங்கினார்.

இக்கூட்டத்திற்கான விளக்க உரையை மக்கள் நல பாது காப்பு கழகம்.செயலாளர். முஹைதீன் இப்ராஹிம் வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறப்புரையை மக்கள் நல பாது காப்புகழகம் பொருளாளர் சாலிஹ் ஹூசைன் மற்றும் பி.அப்துல் ஹமீது மாநில பொது செயலாளர் (SDPI.கட்சி) ஆகியோர் வழங்கினர்.

பின்னர் கூட்டத்திற்கான கருத்துரைகளை நகர் நல இயக்கம். ஹமீது அப்துல் காதர், தமுமுக நகர் தலைவர் பாதுஷா, விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் ஹமீது யூசுஃப், சாலை வெல்ஃபேர் டிரஸ்ட் சுபைர், SDPI கட்சி செயலாளர் ஹமீது பைஸல், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அற்புதகுமார், சித்திக் 12வது வார்டு முன்னால் கவுன்சிலர், ஹாஜா அலாவுதீன் நகர் துணைத்தலைவர்  (SDPI. கட்சி), ஹாஜா இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அல் பைனா பள்ளி தாளாளர் ஜாபீர் சுலைமான் அவர்கள் கிழக்கு தெரு ஜமா அத் துனை பொருளாளர்.அஜிஹர் அவர்களும் ஜூம் ஆ பள்ளி ஜமா அத் பொருளாளர்.ஹபீப் முஹம்மது தம்பி அவர்களும் , சாலை தெரு வெல்பர் டிரஸ்டி நிர்வாகிகளும் சின்ன கடைத்தெரு மக்கள் ஊழியர் சங்கம் நிர்வாகிகளும், 18.வாலிபர்கள் சாலைதெரு ஜக்காத் கமிட்டி நிர்வாகிகளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளும் , வடக்குத்தெரு மற்றும் NMTதெரு சங்கங்களின் நிர்வாகிகளும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

அனைவருடைய கருத்துக்களும் கேட்டறிந்த பின்பு, இதற்கு தீர்வு காணும் விதமாக நாளை (செவ்வாய் கிழமை 02-01-2018) காலை 08.00 மணியளவில் ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிப்பது எனவும், பின்னர் ஆணையரை சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இச்சந்திப்புக்கு பின்னும் முறையான தீர்வு எட்டப்படாவிடில் நீதிமன்றத்தை நாடுவது என எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். இனி வரும் காலங்களில் ஊர் பிரச்சினைகளுக்காக இதுபோல் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவது என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாக நகர் நல இயக்கம் பஷீர் நன்றியுரை வழங்கினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!