கீழக்கரை வார்டு மறுவரையறை மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க இன்று (01.01.2018) கூட்டம் ஏற்பாடு..

கீழக்கரை நகராட்சி பகுதிகளிலுள்ள வார்டுகளை மறு வரையறை படுத்தியுள்ளது சம்பந்தமாக ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் வெளியிட்ட நாள் முதல் பொதுமக்கள் மத்தியில் பல கருத்துக்களும், குழப்பங்களும் நிலவி வருகின்றது. இது சம்பந்தமாக கருத்துக்களை பொதுமக்கள் ஆட்சியர் கவனத்திற்கு 02-01-2018 வரை கொண்டு செல்லலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மின்னஞ்சல் மூலமாக கருத்துக்களை பதிவு செய்தாலும், அரசாங்க அதிகாரிகளின் கவனத்தில், இருந்து விடுபட பல வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, ஊர் மக்களின் சார்பாக, ஒட்டு மொத்த கருத்தாக ஆட்சியரிடம் மனு அளிக்கும் விதமாக நாளை மாலை 06.30 மணியளவில் உசைனியா மஹாலில் சமுக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பாக கருத்து கேட்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்று அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

மேலும் வரும் 02-01-2018ம் தேதிக்கு மேல் இது சம்பந்தமாக அரசு கருத்துக்கள் ஏற்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளதால் நாளை தவறாது கலந்து கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

இது சம்பந்தமான விபரங்களுக்க 90039 10049,, 9443317665,  80127 11656‬ என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.