கீழக்கரை வார்டுகள் மறுவரையரையில் குளறுபடி, கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் …

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள வார்டுகள் மறுவரையறுக்கப்பட்டு அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியிரால் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக ஆட்சேபணைகள் இருந்தால் கீழக்கரை ஆணையரிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தீர ஆராய்ந்த பொழுது அதில் பல குளறுபடிகள் இருப்பது கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மூலம் கண்டறியப்பட்டு, ஆணையருக்கு மனு அளிக்கும்படி அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டப் போராளிகள் குழுமம் AWARNESS 001

விபரங்களுக்கு மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்👆🏽

ஆணையருக்கு அனுப்ப வேண்டிய மனுவின் மாதிரி படிவமும், பிற விபரங்களும் (PDF FORMAT) கீழே தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் கீழக்கரையின் நலனை கருதி மனு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.