கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (30/12/2017) காலை 10.30 மணியளவில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு (Annual Alumnae Meet – 2018) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு யுவன் சங்கர்ராஜா என அறியப்படும் அப்துல் ஹாலிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் உரையாடினார்.

இந்நிகழ்வுக்கு ஏராளமான முன்னாள் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரகாசிப்பு (SPARKLES) என்ற தலைப்பில் நூல் வெளியீடடு; விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் நூலை வெளியிட கல்லூரி தாளாளர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். முன்னாள் மாணவிகள் தங்கள் கல்லூரியில் பயின்ற போது உள்ள அனுபவங்கள் பற்றியும் நினைவலைகள் பற்றியும் தஙக்ள் தோழிகளுடன் பகிர்ந்துகொண்டார்கள். முனைவர் பி.சுலைஹா ஷகல் கல்லூரி துணைமுதல்வர் மற்றும் எஸ். பாத்திமா ருஸ்தா உதவிப்பேராசிரியை, வணிகவியல் துறை இருவரும் இணைந்து தேர்வு செய்யப்பட்ட  ஐந்து முன்னாள் சஙக்த் தூதுவர்களை கௌரவப்படுத்தும் வகையில் குறுநாடகம் ஒன்று நடித்துக் காட்டினார்கள். இறுதியாக ஜி.சரவணப்பிரியா உதவிப்பேராசிரியை கணிதத்துறை நன்றியுரை வழங்க இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பாத்திரம் பொது  மேலாளர் சேக் தாவூத்கான் மற்றும் மாணவியர் சஙக்த்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image