அமீரகத்தில் வரி அமலாகும் முன் பொருட்களுக்கு வரி வசூல் செய்யும் சில்லரை வணிகர்கள் மீது நடவடிக்கை.

எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி 2018 முதல் துபாயில் 5% மதிப்பு கூட்டல் வரி நடைமுறைக்கு வரவிருக்கும் சூழலில் 11 சில்லரை வியாபாரக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதிப்பு கூட்டல் வரி அமலாகும் முன்பாக சில சில்லறை வணிகர்கள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இவ்வவரிச் சட்டம் அமலாகும் முன் பொருட்களின் விலையோடு வரியையும் சேர்த்து வசூலிக்கும் கடைகளை கண்டறிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,மதிப்பு கூட்டல் வரிச் (VAT) சட்டத்தை காரணமாக வைத்து விலையை உயர்த்துவது சட்ட விரோதமான செயல் என்பதால் அதற்கு அபராதமாக திர்ஹம் 500 முதல் திர்ஹம் 15,000 வரை விதிக்கப்படும் என்று சட்டம் விளக்குகின்றது. பொதுவாக அமீரக அரசு நுகர்வோர் நலனை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் வாடிக்கையாளர்களும் சட்ட விரோதமாக வசூலிக்கும் கடைகளைப் பற்றி 600 54 5555  என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.