கீழக்கரையில் ஒரு பாரம்பரிய நடை.. இளைஞரின் பாராட்டுதலுக்குரிய முயற்சி… போட்டோக்கள் வீடியோ தொகுப்பாக…

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆதாரம், அதனுடைய அடி நாதமாகிய வரலாற்றை பாதுகாத்து புரிந்து கொள்வதில்தான் உள்ளது. அதற்கு அழகிய உதாரணம் வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய ஐரோப்பா, துருக்கி, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்று வரை 600 முதல் 1000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுகளை பாதுகாத்து இன்றைய தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக அடையாளம் காட்டி வளர்கிறார்கள். அதுபோல் வரலாற்று ஆய்வுகளுக்காக வருடம்தோறும் பல கோடிகளை செலவு செய்து வருகிறார்கள். ஆனால் பல்லாயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்தியா போன்ற நாட்டில் வரலாற்று சான்றுகளை முறையாக பாதுகாக்கப்படாத காரணத்தால், இன்றைய தலைமுறை நம் நாட்டின் கலாச்சாரத்தை மறந்து வெளிநாட்டு கலாச்சாரத்தையே தம் கலாச்சாரமாக பின்பற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றும் விதமாக கீழக்கரையைச் சார்ந்த அபுசாலிஹ் என்ற இளைஞர் கீழக்கரையின் பாரம்பரியத்தைய அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கீழக்கரை பாரம்பரிய நடை “KILAKKARAI HERITAGE WALK” என்ற நிகழ்வை Baadhan Heritage League (Kilakkarai Hertiage) என்ற அமைப்பு சார்பாக 30/12/2017 அன்று தொடங்கி கீழக்கரை மக்களுக்கு ஊரின் பாரம்பரியத்தை விளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவ்வியக்கத்தை பி.எஸ்ஏ.அஸ்ரஃப் புகாரி இன்று தொடங்கி வைத்தார். இன்றைய நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இது சம்பந்தமாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அபுசாலிஹ் கூறுகையில் “ இந்த நிகழ்வை வருடத்திற்கு மூன்று முறை நடத்த திட்டமிட்டுள்ளோம், மேலும் இதன் மூலம் கீழக்கரையின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரையின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கீழக்கரை பாரம்பரிய உணவான தொவை, தேங்காய் சிரட்டையில் பரிமாறப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

Comments are closed.